தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் ஒத்துழைப்புடனும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடனும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அரச சேவையில் மோதல்களுக்கான தீர்வாக, சமூக உரையாடல் ஒன்றை உருவாக்குவதற்கான படிமுறைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமான முதலாவது கலந்துரையாடல் கடந்த 06 ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சருடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆலோசர், அவுஸ்திரேலியரான தொம்ஸன் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைப்பிரதிநிதி திருமதி சிம்ரின் சிங் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள், இந்த நாட்டில் உள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களுமே நாட்டினது பிரதான சேவை வழங்குனர்களாகும். எனினும் அவர்கள் நாட்டின் சமூக, பொருளாதாரத்திற்கு அவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதிக சக்தி மிக்க அரச சேவை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றால் மிகவும் நல்ல முகாமைத்துவ முறைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அங்கு உரையாடப்பட்டது. வேலை நிறுத்தம், போராட்டங்கள் இன்றிய அரச சேவை ஒன்றை நடாத்துவதற்காக அரசின் வேண்டுகோளின் படி சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இவ்வாறு அரச சேவையின் முகவரிப் போராட்டங்களை தீர்க்கும் முறைமை ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் குறித்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிமல் சரணதிஸ்ஸ, முன்னாள் செயலாளர் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் தலைவர் மஹிந்த மடிஹஹேவா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.