கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்டகாலமாக விளையாட்டுத்துறையில் சாதனை படைத்து வரும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்குடா பிரதேசத்திலுள்ள 20 கழகங்களை உள்ளடக்கி 20 பந்து ஓவர்கள் கொண்ட கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஓட்டமாவடி அமீல் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தி வருகின்றது.
அந்த வகையில் (23) ம் திகதி வெள்ளிக்கிழமை வளர்பிறை விளையாட்டுக் கழகத்தின் கடினப்பந்து கிரிக்கெட் அணிக்கான சீருடை அறிமுக நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் ஏ.எல்.ஏ. காதர் அவர்களின் தலைமாயில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கழகத்தின் போசகரும் சட்டத்தரணியுமான எம்.எம்.எம். ராசிக் அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதியாக கழகத்தின் ஆலோசகரும் மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய அதிபருமாகிய எம்.ஏ.சீ.எம். ஜீப்ரி கரீம் மற்றும் கழக உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.