.திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நாற்பதாயிரம் ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்தாது தலைமரைவாக இருந்த நபரை இம் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(10) உத்தரவிட்டார்.
திருகோணமலை,ஆனந்தபுரி,பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் திருமணம் முடித்து மூன்று பிள்ளைக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில் நான்கு மாதங்களாக நாற்பதாயிரம் ரூபாய்யினை தாபரிப்பு பணத்தினை செலுத்தாது தலைமரைவாக இருந்த நிலையிலே மனைவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய வெள்ளிக்கிழமை (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.