அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்பாளன் ஏகன் அல்லாஹ்வின் திருப் பெயரால்
பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களுக்கும்.
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
இலங்கை முஸ்லிம்களின் கமூக, சமய மற்றும் அரசியல் வரலாற்றில் இன்றய 21ம் நூற்றாண்டின் 2ம் தசாப்த்தத்தின் ஆரம்பம் முதல் மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாக தடம் பதித்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
அண்மைக் காலமாக முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு, வணக்க வழிபாடுகள், மதக்கிரியைகள், மதக்கலாச்சாரம், மதஸ்தலங்கள் மொத்தத்தில் இஸ்லாமிய வரையறைக்குள் அதன் கலாச்சார விழிமியங்களுடன் வாழ்தல் என்பது போன்ற அத்தனைக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதைப் பார்க்கின்றோம்.
ஓவ்வொரு முறையும் நம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் அராஜகங்களும் அரங்கேற்றப்படுகின்ற வேளைகளில் மாத்திரம் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஆளுக்காள் அரிக்கைகளை விடுவதும் அதன் பிறகு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்பது போல் அது பற்றிய எவ்வித சிந்தனையுமின்றி அமைதி காப்பதுவுமே எமது வழமையாக இருந்து கொண்டிருக்கின்றது. இதுவே நாம் அடிக்கடி தாக்கப்படுவதற்கான பிரதாண காரணியாகும்.
எனவே இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம், எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்;? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும், இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும், அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் மற்றும் ஆண்மீகரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட வினாக்களுக்கு விடை காணாமல், முஸ்லீம் மக்கள் பற்றிய கரிசனை என்பது போலித்தனமானது மட்டுமின்றி கேலிக்குரியதுமாகும்;.
இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 70 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றன, இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமுதாயமாக ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரக்கூடிய இரு கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் எக்குறையுமின்றி திட்டமிட்ட அடிப்படையில் மிகவும் கட்சிதமாக செய்து வந்திருக்கின்றன என்பதனை நாமனைவரும் நன்கு அறிவோம், இலங்கை முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் பற்றி மிகவும் அச்சப்படுகின்ற சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இவ்வாறான இந்த நிலையில் நாம் தொடர்ந்தும்; ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டும் குறைச் சொல்லிக் கொண்டும் காலத்தைக் கடத்தாது ஒவ்வொரு தனிமனிதனும் இதை தனக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக ஏற்று அனைத்து விதமான கட்ச்சி இயக்கம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து நின்று இப்படியான சவால்களை எதிர்கொள்வதற்க்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு திருப்பு முனையாக இச்சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.
ஏனெனில் நமது சமூகம் கமூக, சமய, அரசியல் வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறுபட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல்வேறுத் தடைகளைத் தாண்டித்தான் பயனித்திருக்கின்றது என்பதுவே நமது நீண்டகால வரலாற்றுண்மை.
இந்த வரலாற்றுத் தொடரில் முன்னய காலங்களில் நமது அரசியல் தலைமைகள் எப்படிப்பட்ட சவால்களையும் தனித்து நின்று எதிர்கொள்ளக் கூடிய வகையில்; அன்றய சமூக ஒழுங்கமைப்பும் அரசியல் களநிலவரமும் ஓரளவேனும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இன்றைய சமூக ஒழுங்கமைப்பும் அரசியல் களநிலவரமும்; தலைமை, நிறுவாகம், சட்டம், ஒழுங்கு போன்ற அனைத்துப் பகுதிகளிலும்; மிகவும் பாதகமான சூழ்நிலையையே தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் நமது கடந்தகால அரசியல் தலைமைகளை உதாரணம் காட்டி அவர்களால் சாதிக்க முடிந்ததை ஏன் இன்றய நமத அரசியல் தலைமைகளால் சாதிக்க முடியாதுள்ளது என்று கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பது ஒரு ஆரோக்யமான அனுகுமுறையாக அமையாது.
ஏனெனில் இன்றைய இந்த சமூக மற்றும் அரசியல் சூழ்நிலை நம் சமூகத்தின் ஆக அடிமட்ட உறுப்பினரிலிருந்து அதி உயர்மட்ட உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டியதாகவே உருவெடுத்துள்ளது என்பதுவே யதார்த்தமான களநிலவரமாகும்.
எனவே பல தசாப்த்தங்களாக நம் சமூகம் வேண்டி நிற்க்கும் மிக முக்கிய ஒரு விடயமான இந்த சகோதரத்துவம், சமூக ஒற்றுமை, மற்றும் தலைமைத்துவம் ஆகியவை வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இன்று மிகக் கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினர்களது ஆதங்கமும் ஏக்கமும் எந்த வகையிலேனும்; இவற்றை அடைந்தே தீர வேண்டும் என்பதாகவே இருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இதன் பிறகும் அது வெறும் பேச்சுப் பொருளாக இருப்பதனை அனுமதிக்க முடியாது, என்ன வில கொடுத்தேனும் அதனை அடைந்தேத் தீர வேண்டும் என்பதுவே நம் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முறண்பட்டுக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு முறண்பட்டுக கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; அப்போது உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஆன்: 8: 46)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102,103);
எனவே எமது பொறுப்புக்களை சரிவர புரிந்து எமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் 'நம் சமூகத்தின் ஆக அடிமட்ட உறுப்பினரிலிருந்து அதி உயர்மட்ட உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து நம் சமூகத்தைப் பலமிக்க ஒரு சமூகமாக் கட்டியெழுப்பி நமது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒரே அனியாக நின்று தொடராக முன்னெடுத்துச் செல்வதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான செயற்திட்டங்களை முன்னெடுக்கக் கை கோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஒரே அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோ, அவர்களைத்தான் அல்லாஹ் நிச்சயமாக நேசிக்கின்றன். (அல்-குர்ஆன்: 61:4)
எமது போராட்டம் பிரிவினைவாதங்களைக் கடந்து நின்று ஒரே அணியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மேற்படி வசனம் தெளிவு படுத்துகின்றது.
ஆகவே நம் சமூகத்தின் சகோதரத்துவத்தினை மீழ்கட்டியெழுப்பி சமூக ஐக்கியத்தினை உறுதிப்படுத்தி அதன் அடித்தளத்தில் நமது இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பலமிக்கதொரு சக்தியாக மாற்றுவதற்க்கு உங்கள் அனைவரதும் பங்களிப்புக்களும் பாரியளவில் எதிர்பார்க்கப்படுகின்றன. அத்துடன் இது தொடர்பான கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் மாநாடுகளும் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படல் வேண்டும்.

ஆதலால் அதன் முதற்கட்டமாக நமது அனைத்துத் தரப்பு அரசியல் தலைமைகளுடனான கலந்துரையாடலைக் காலதாமதமின்றி நடாத்துதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் அவசியமாகும்.
அதனடிப்படையில் எமது நோக்கம் அதனூடாக நாம் அடைந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் இலக்கு அந்த இலக்கை அடைவதற்க்கான எமது செயற்திட்டங்கள் ஆகியவை பின்வருமாறு அமையப் பெறுகின்றன.
எமது நோக்கு:
பக்கச் சார்பு இயக்கச் சார்பு மற்றும் கட்ச்சிச் சார்பற்றதும், நேர்மையானதும், தூய்மையானதுமான திறமையும் சுணிச்சலுமிக்கதும் எந்தவொரு சக்த்திக்கும் விலை போய் விடாததும் அல்லாஹ்வைத் தவிர வேறெந்தவொரு சக்த்திக்கும் அஞ்சாத அத்துடன் தூர நோக்குடன் கூடிய சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியதான பொதுவான நடுநிலையானதொரு தலைமையினை அடையாளம் கண்டு ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்துப் பொறுப்புக்களையும் பொறுப்பேற்க்கச் செய்தல்.
எமது இலக்கு : இலங்கை வாழ் நமது முஸ்லிம் சமூகத்தை;தை ஆண்மீகம், ஈமான், இறையச்சம், சகோதரத்துவம் ஐக்கியம் ஆண்மீக மற்றும் இலௌகீகக் கல்விப் பொருளாதாரம் அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் கூடிய பலமிக்கதொரு சக்தியாகக் கட்டியெழுப்பப்படுதல்.

எமது செயற்திட்டங்கள்; :1. நாளுக்கு நாள் நலிவடைந்து சென்று கொண்டிருக்கும் நமது சகோதரத்துவத்தினை மீழ் கட்டியெழுப்பும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுத்தல்
2. சகோதரத்தவத்தினைக் கட்டி எழுப்புவதற்க்குத்; தடையாக இருக்கும் காரணிகள் என்ன என்பது பற்றி இனங்கண்டு அவற்றை முற்றாகக் கழைவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
3. ஒவ்வொரு தனிமனிதன், இயக்கங்கள், அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் முடிந்த வரை நம் சகோதரத்துவத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் அரிக்கைகள் விமர்சனங்கள் போன்ற அத்தனை விதமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்ளும் வகையிலான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் வழங்குதல்.
4. இப்பணி அரசியல் தலைவர்களுக்கு அல்லது சமயத் தலைவர்களுக்கு மாத்திரம் கடமையான ஒன்றல்ல. மாறாக நம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களுக்கும் கடமையாகும் என்பதை அனைவருக்கும் உணரச் செய்தல்.
5. அனைத்து விதமான அரசியல் மற்றும் சமயப் பிரிவுகளுக்கு வெளியே நின்று என்றாலும் அவை அனைத்துத் தரப்பினர்களையும் உள்வாங்கிய வகையிலும் எவ்வித பக்கசார்பும் அற்ற நிலையிலும் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் மட்டும் அனைவர்களையும் ஒன்றிணைத்தல்
6. ஒவ்வொரு தனிமனிதன்;, இயக்கங்கள், அல்லது அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களையும் தங்களுக்குத் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணித்து அனைவரும் ஒரே இஸ்லாமிய சகோதரர்கள் எனும் பொதுவான கொள்கையின் பால் இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருதல்;.
7. அனைத்துத் தரப்பினர்களும் தரத்தினர்களும் விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் ஒருவரையொருவர் மதித்து நடந்து கொள்ளும் வகையிலான ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குதல்;.
இவை ஒரு இலகுவான கருமமன்று நம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரதும் உளப்பூர்வமான ஒத்துழைப்பின்றி இது அசாத்தியமே எனவே எமக்கு மத்தியில் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்டத் தலைமைத்துவமும் கட்டி எழுப்பப்பட்டாக வேண்டும் என்பதில் உண்மையாளர்களாக இருப்பவர்கள் மேற்படி எமது முன்னெடுப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குவீர்கள் என்றே நம்புகின்றோம்.
எனவே இது சம்மந்தமான தாங்களின் மேலானக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் எமக்கு வழங்குமாறு உரிமையுடனும் அன்புடனும் மிகத்தாழ்மையுடனும் எதிர்பார்கின்றோம்.
முடியாது என்று முயற்ச்சியே செய்யாதிருப்பதைவிட,
முயற்ச்சி செய்து முடியாமல் போவது சிறந்ததாகும்
என்றே கருதுகின்றோம்
இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன் - ஜே. பி.
ஸ்தாபக் தலைவர், பணிப்பாளர்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
தொடர்புகளுக்கு : : 0715654580