இதேவேளை இஸ்ரேலிலுக்கு சென்று சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அண்மையில் இடம்பெற்ற இஸ்ரேலில் விவசாய தொழில்துறையில் தொழில்வாய்ப்புக்களை பெற்ற இளைஞர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஜப்பானில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது வெளிநாட்டு பணியகம் மற்றும் அரசாங்கத்தின் ஒரேயொரு வெளிநாட்டு பிரதி நிறுவனமான இலங்கை வெளிநாட்டு முகவர் நிலையமாகும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர் இஸ்ரேலில் தொழில் வாய்ப்பிற்காக செல்வோர் தொழில் வாய்ப்பிற்கான காலஎல்லை முடிவடைந்தவுடன் உடனடியாக இலங்கைக்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட விசாக்காலப்பகுதிக்கு மேலதிகமாக அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதன் மூலம் மற்றொரு இலங்கையருக்கான தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகும். உரிய காலத்திற்குள் தொழில் வாய்ப்பிற்கான காலத்தை பூர்த்தி செய்து இலங்கைக்கு திரும்புவோருக்கு மீண்டும் அந்நாட்டில் தொழில்வாய்ப்பிற்காக செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருப்போருக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறானோரினால் எமது நாட்டுக்கு கிடைக்கவுள்ள தொழில் வாய்ப்பிற்கான கோரிக்கையை நாம் இழப்போம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.