அம்பாறை – சங்கமன் கிராமோதய கிராமம் இன்று மக்கள் பாவனைக்கு


ம்பாறை மாவட்டத்தின் திருகோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 'சங்கமன்' கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய கிராமம் இன்று மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
அனைவருக்கும் நிழல்' வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாதிரிக் கிராமத்தின் அங்குரார்ப்பண வைபவம் வீடமைப்பு மற்றும் நிர்மதாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

சங்கமன் பிரதேசத்தில் குடியிருப்பு வசதிகள் இல்லாதிருந்த 25 தமிழ்க் குடும்பங்கள் வீடுகளைப் பெற இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்றைய நிகழ்வில் 100 குடும்பங்கள் மத்தியில் வீட்டுக் கடன் காசோலைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இளைஞர் யுவதிகள் 100 பேருக்கு 'ஷில்ப சவிய' திட்டத்தின் கீழ் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது. இது தவிர சொந்துரு-பியச வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 50 குடும்பங்கள் மத்தியில் ஒரு கோடி ரூபா கடன் தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -