தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் பகுதியில் 26.03.2018 அன்று காலை 7.30 மணியளவில் மோட்டர் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மூவர் கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் - நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு மோட்டர் சைக்களும் பத்தனை டெவோன் பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இரு மோட்டர் சைக்கிள்களிலும் சென்ற செலுத்தி சென்ற மூவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் தவறான பக்கத்தில் செலுத்தியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.