கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

அகமட் எஸ். முகைடீன்-
ல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் கே. லவநாதன் தலைமையில் இன்று (16) வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் சுலக்சன், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை பிரதேச செயலகத்தில் பதிவு செய்த விளையாட்டுக் கழகங்கள் அனைத்திற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -