510 வெளிவாரி (External Degree) மற்றும் 19 முகாமைத்துவ முதுமாணி பட்டப்படிப்பு (MBA) துறைகளில் தமது பட்டப்படிப்பு நெறிகளைபூர்த்தி செய்த பட்டாதாரி மாணவர்கள் உட்பட மொத்தம் 950 பேர் இவ்வருடம் தமது பட்டங்களைப்பெறுகின்றனர். பட்டமளிப்பு விழா மூன்று கட்டங்களாக நடைபெறும்.
பட்டமளிப்புக்கான சீருடையையும், பட்டமளிப்பு மாலையையும் அனுமதிச்சீட்டினையும் எதிர்வரும் 17 ம் திகதி (மார்ச்) தென்கிழக்குப்பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை பெற்றுக்கொள்ளலாமென பதிவாளர் அறிவிக்கின்றார். பட்டமளிப்பு ஊர்வலம் அன்று (ஏப்ரல் முதலாம் திகதி) காலை 7.45 மணிக்கு ஆரம்பமகவுள்ளத்தால் சகல பட்டம் பெறும் மாணவர்களையும் அன்று காலை 7.30 மணிக்கு சமூகமளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். தவறும்பட்சத்தில் அவர்கள் எக்காரணத்தைக்க்கொண்டும் பட்டமளிப்பு ஊர்வலத்தில் சேர்த்துக்கொள்ளபடமாட்டர்கள்.