சத்தியப் பிரமாண வைபவமும் சாய்ந்தமருது பிரகடனமும்



பீர் முகம்மட் அவர்களின் முகநூலில் இருந்து.......

சாய்ந்தமருதில் வெற்றி பெற்ற சுயேட்சைக் குழு அம்பாரையில் 
ஆளுநர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.

அதில் இரண்டு விடயங்கள் பரவலாகப் பேசப்படுகின்றன.
1) முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுடன் இந்த விடயத்தில் தொடர்புபட்டிருக்கத் தேவையில்லை.
2) சாய்ந்தமருதில் இந்த வைபவத்தை ஒழுங்கு செய்திருக்கலாம். i

மேற்படி இரு கருத்துகள் தொடர்பிலானதே இப்பதிவு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் வைபவ ரீதியாக செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் அதற்காக
சபை கிடைக்கும் வரை அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைப்பதில்லை என்று பைஅத் செய்து பிரகடனம் வெளியிட்டு தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பின்னர் சத்தியப் பிரமாண வைபவத்திற்கு ஆளுநரின் நேர ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக மட்டும் அரசியல் கட்சியின் தலைவரிடம் சென்றமை நியாயமாகத் தெரியவில்லை.

இரண்டாவது
இந்த வைபவத்தை சாய்ந்தமருதில் நடத்தியிருக்கலாம் என்பது சிலரின் கருத்தாகும்.

கட்சிகளில் நின்று வெற்றி பெற்றவர்கள் கட்சிகளின் தலைமைகளிடமும் சுயேட்சையில் வெற்றி பெற்றோர்
ஊரில் பொது மக்கள் முன்னிலையிலும் சத்தியப்பிரமாண வைபவங்களை ஒழுங்கு செய்திருந்தமையை அண்மைய பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊரின் முக்கியஸ்தர் ஒருவரின் முன்னிலையில் வைபவத்தை ஒழுங்கு செய்திருக்கலாம். கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரே நமது ஊரில்தான் இருக்கிறார். அம்பாரை நிகழ்விலும் அவர் கலந்து கொண்டவர். அவர் சாத்தியமில்லாது போனால் ஊரில் இன்னும் எத்தனையோ உயர் நிர்வாகத்தினர் உள்ளனர்.அவர்களில் எவர் முன்னிலையிலாவது பள்ளிவாயல் பணி மனையில் ஊர் மக்களின் பங்கேற்புடன் வைபவத்தை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

இதன் மூலம் பொதுமக்களைக் கவனத்திற் கொள்ளாது தூர விலகிச் செல்லும் சத்தியப் பிரமா ண வைபவத்தைத் தவிர்த்திருக்கலாம்.

நியாயமான கருத்துக்களை முகநூலில் பதிவு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற விசுவாசித்தலிலேயே இப்பதிவு இடப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -