யாழில் தமிழ் பெண்களின் சுய தொழில் மேம்பாட்டுக்கு இராணுவத்தால் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!


போரால் பாதிக்கப்பட்ட வறிய பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 15 பெண்களுக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இன்று புதன்கிழமை வாழ்வாதார, பொருளாதார, சுய தொழில் ஊக்குவிப்புக்காக தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன.
யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பலாலியில் வைத்து முன்னாள் போராளிகள் அடங்கலான பயனாளிகளுக்கு இயந்திரங்களை சம்பிரதாயபூர்வமாக கையளிக்கின்றார்.
இவ்வைபவத்தில் விசேட அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில் போரால் பாதிக்கப்பட்ட வறிய பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த தமிழ் உறவுகளின் வாழ்வாதார, பொருளாதார, சுய தொழில் ஊக்குவிப்புக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி, ஒத்தாசை வழங்க வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார். இருப்பினும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு இவ்விடயத்தில் ரொம்பவே போதாது என்று கவலை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -