காரைதீவில் நட்டநடுநிசியில் பயிர்பச்சைகளை அழித்து யானைகள் துவம்சம்:

மாலையானால் மக்கள் மத்தியில் மரணபயம்: விடியவிடிய விழிப்பு!
வனஜீவராசிகள் அலுவலர்கள் எதற்காக ? – பொதுமக்கள் கேள்வி!
காரைதீவு நிருபர் சகா-

ம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை முடிவுறுந்தறுவாயில் யானைகளின் ஊடுருவல் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்துவருகின்றது.

மாலையானால் மக்கள் மத்தியில் மரணபயம் பீடித்துக்கொள்கின்றது. உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய தீனா(நெருப்பு) வைத்துக்கொண்டு விழித்திருக்கவேண்டியுள்ளது.
நட்டநடுநிசியில் 15க்கும் மேற்பட்ட யானைப்பட்டாளமொன்று காரைதீவுக்குள் ஊடுருவி பலத்த சேதத்தை விளைவித்துள்ளது.

தொழினுட்ப உத்தியோகத்தர் வெற்றிவேல் உதயகுமரன் என்பவரது வீட்டின் பின்புறமுள்ள அவரது தோட்டத்திற்குள் புகுந்து அந்த யானைகள் 12தென்னம்பிள்ளைகளை வீழ்த்தி குருத்தை இழுத்து சாப்பிட்டு சேதமாக்கியுள்ளன.
அத்துடன் அருகிலிருந்த அனைத்து வாழைமரங்களையும் சேதமாக்கி துவம்சம் செய்திருக்கின்றன. வேலிகள்சேதமாக்கப்பட்டுள்ளன.

வயலுக்குள் யானை !
வயல்பிரதேசத்தில் அறுவடைக்குத்தயாராகவிருந்த விளைந்த வேளாண்மையை யானைகள் அப்படியே உறிஞ்சி நட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வட்டைவிதானை இ.திருநாவுக்கரசு கே.தட்சணாமுர்த்தி போன்றபல விவசாயிகளின் அறுவடைக்குத்தயாராகவிருந்த வேளாண்மைகளை முற்றாகச்சேதப்படுத்தியுள்ளது.

ஏலவே நீர்ப்பாய்ச்சல் இன்மை வரட்சி நேரத்திற்க உரம்கிடைக்காமை போன்ற பல்வேறு காரணங்களால் விளைச்சல் குன்றியநிலையில் இருந்த வேளாண்மை இறுதிநேரத்தில் அண்மையில்பெய்தபெருமழையினால் சேதமடைந்து இன்று அறுவடைக்குத் தயாராகவிருந்தவேளை யானைகள் புகுந்து இந்த அழிவை ஏற்படுத்தியிருக்கின்றன.

பல ஏக்கர் வயல்நிலம் இச்சேதத்தால் கைவிடவேண்டியநிலையிலுள்ளன.இதனால் அவ்விவசாயிகள் பலத்த பாதிப்பையும் நட்டத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.
ஊருக்குள் யானை !
இதேவேளை அந்த யானைகள் ஊருக்குள் பிரவேசித்து வளவுகளுக்குளால் சென்று பயிர்பச்சைகளை சுமார் 2மணிநேரம் அழித்திருக்கின்றன.
அந்தவேளை மக்கள் குய்யோ முறையோ எனக் அலறியடித்து உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடினர். சிறுகுழந்தைகளுள்ளவர்கள் விடியவிடிய ஒளித்திருந்தனர்.

அலுவலர்கள் யாருக்காக?
பாதிக்கப்பட்ட தொழினுட்ப உத்தியோகத்தர் வெ.உதயகுமாரன் கூறுகையில் நான் யானையைக்கண்டதும் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலர்களுக்கு அறிவித்தேன். அவர்கள் தற்போது வாகனமில்லை. வரமுடியாது என்றனர்.

அப்படியென்றால் இந்த அலுவலர்கள் என்ன அரசபணியாற்றுகின்றார்கள்? என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
இங்கு யானைகள் மனிதர்களை கொன்று குவித்த பின்னர்தான் அவர்கள் வருவார்கள் என்றால் எதற்காக இந்த திணைக்களம்? மாலையானால் மரண பயம். அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.
பொதுமக்கள் பலரும் இவ்வாறான கருத்துக்களையே சொன்னார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -