எரித்தவனே..!
+++++++++++
Mohamed Nizous
எண்ணூறு கோடிகளை
எரித்துக் கரித்த
பன்னிகளைக் கண்டால்
பார்த்துக் கேட்கணும்.
அழிந்து போனது
அமெரிக்க சொத்தா?
இழிந்து போனவனே
இலங்கையின் வளம்டா.
கோடிகளை அழித்த
கேடிகளின் கூட்டமே!
தேடுகின்ற கஷ்டம்
தெருப் பொறுக்கி அறிவானா?
எத்தனை சைவர்கள்
இருக்குது கோடிகளில்
என்று கூடத் தெரியாது
எரித்த மூடனுக்கு
என்ன பெரிய வீரமா
இருக்கிறத எரிக்கிறது
சின்னப் பிள்ளை கூட
சிம்பிளா எரிக்குமே
காடையன் எரித்தான்
காவாலி உடைத்தான்
நாடு நாதியற்று
நடுத்தெருவில் நிற்கிறது
சுற்றுலாத் துறை
சுருண்டு படுக்கிறது
மற்ற வளர்ச்சிகளும்
மல்லாக்கக் கிடக்கிறது
உள்ளதெல்லாம் எரிந்தாலும்
உடைந்து போக மாட்டோம்
பில்லியன்கள் அழிந்தாலும்
அள்ளாஹ் கைவிடான்.