வாழ்வாதார திட்ட வரைபு ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட ஒருங்கினைப்பாளரிடம் கையளிப்பு


அபு அலா -
னாதிபதியின் விசேட கருத்திட்டத்தின் கிழ் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பதினெட்டு மாதத்திற்குள் 18 வகையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் தேசிய ரீதியாகவுள்ள கிராமங்கள் தோறும் நிலவுகின்ற மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும், மக்கள் குறைகள் தொடர்பான திட்ட வரைபுகளை ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரிகள் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊழலற்ற அபிவிருத்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்குடன், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிற்கென்று நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரிகள் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக, அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குரிய கிராமங்களின் திட்ட வரைபுகளை குறித்த பிரதேசத்தின் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியும், ஊடகவியலாளருமான பைஷல் இஸ்மாயிலினால் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட ஒருங்கினைப்பாளரும், உதவிப் பணிப்பாளருமாகிய அக்கலங்க ஹெட்டியாராச்சி மற்றும் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித் திட்ட வட, கிழக்கு இணைப்பாளர் ஐ.வேலாயுதம் ஆகியோரிடம் திங்கட்கிழமை (19) கொழும்பில்லுள்ள ஜனாதிபதியின் ஊடக காரியாலயத்தில் வைத்து கையளித்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட விசேட தேவையுடைய குடும்பங்கள், விதவைகள், வறிய குடும்பங்கள் போன்ற குடும்பத்தில் உள்ளவர்களை இனம் கண்டு அவர்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கு தேவையான சுய தொழில் உபகரணங்களான தையல் இயந்திரம், மீன்பிடி உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், குடிசைக் கைத்தொழிலுக்கு தேவையான உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் போன்ற உபகரணங்களை வழங்கக் கோரியே இந்த திட்ட வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது , 200 குடும்பங்களுக்கான இலவச குடி நீர் இணைப்பு, 100 குடும்பங்களுக்கான மின்சார இணைப்பு, விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், வீதி அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி போன்ற உதவிகளை செய்து தரவேண்டும் என்று ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட ஒருங்கினைப்பாளரும், உதவிப் பணிப்பாளருமாகிய அக்கலங்க ஹெட்டியாராச்சி மற்றும் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித் திட்ட வட, கிழக்கு இணைப்பாளர் ஐ.வேலாயுதம் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.

குறித்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அவர்கள் அது தொடர்பான குடும்பங்களை அடையாளம் கண்டு அதற்கான திட்ட வரைபினை சமர்பிக்குமாறும் வேண்டிக் கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -