இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
நாமல் ராஜபக்ஷக்கு அமெரிக்க செல்ல தடை விதிக்கப்பட்டமையானது இலங்கைதிருநாட்டில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதைஎடுக்காட்டுகிறது.
நாமல் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லவில்லை , அல்லது நாட்டிற்கு எதிராகசூழ்ச்சி செய்ய செல்லவில்லை. அவரது நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கில்கலந்துகொள்ளவே அமெரிக்கா சென்றுள்ளார்.ஆனால் காரணம் இன்றி அவரது பயணத்தைஅமெரிக்க தடை செய்துள்ளது. இது அமெரிக்காவின் இலங்கை ஆதிக்கத்தைஎடுத்துக்காட்டுக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க எதிர்ப்பு கொள்கையில் உள்ளவர் என்பது உலகறிந்த விடயம்அவர் எப்போதும் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனுக்குஆதரவான கொள்கையில் இருப்பவர்.
அவர் அன்று அமெரிக்காவுக்கு தலை சாய்த்து இருந்தால் இன்றும் அவரே இந்த நாட்டின்ஜனாதிபதி. ஆனால் அவர் அமெரிக்க சதியில் சிக்கவில்லை.ஆனால் இன்று நாடுஅமெரிக்காவின் சதி வலைக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.