தொண்டா – திகா சகாக்கள் இடையே நோர்வூட்டில் மோதல் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி இரண்டு வாகனங்கள் சேதம்


க.கிஷாந்தன்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகருக்கு அருகாமையில் 28.03.2018 அன்று மாலை இருகட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரு கட்சி ஆதரவாளர்களின் மோதலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த மோதல்களுக்கு மஸ்கெலியா பிரதேசபையில் தலைவர் தெரிவில் ஏற்பட்ட முறுகல் நிலையே தொடர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் கல்வீச்சுக்குள்ளாகி காயமடைந்து இருப்பதாகவும் அவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த கல்வீச்சு காரணமாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அவர்களின் வாகனமும், இம் முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் தெரிவான பா.சிவநேசன் அவர்களின் வாகனமும் சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம் குறித்து 28.03.2018 அன்று மாலை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலின் பின் நகரில் மற்றும் ஏனைய பகுதிகளில் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின், பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -