மஸ்கெலியா பிரதேதமும் நகரமும் அபிவிருத்தி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது மகளீர் தின நிகழ்வில் அமைச்சர் திகா பெருமிதம்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்- 
லையகத்தில் உள்ளூராட்சி சபைதேர்தலினூடாக பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகளவில் கிடைத்துள்ள இந்த சந்ததர்ப்பம் நல்லாட்சி அரசினூடாகவே கிடைத்துள்ளது என தொழிலாளர் தேசிய சங்ககத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்ககள் உட்ககட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சவதேச மகளீர் தினம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளீர் அணி தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமாகிய சரஸ்வதி சிவகுருவின் தலைமையில் 17.03.2018 மஸ்கெலியாவில் இடம்பெற்ற இந் நிகழ்வானது மஸ்கெலியா பிரதேச சபையிலிருந்து மஸ்கெலியா விளையாட்டு மைதானம் வரை பேரணியாக சென்று மலையக கலை கலாசார நிகழ்வுகளுடன் ஆ ரம்பமாகியது

நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மஸ்கெலியா பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டனி அமோக வெற்றியீட்டியது இதனூடாக மஸ்கெலிய நகரத்தையும் மஸ்கெலிய பிரத்சத்தையும் அபிவிருத்தி செய்ய எனக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது தேர்தல் காலத்தில் தொழிலாளர்களை இ.பி.எப் பணத்தை கொள்ளையடித்து விட்டதாக தேயிலை மலைகளில் வந்து பொய் பிரசாரத்தை சிலர் மேற்கொண்டனர் இப்போது அவர்கள் எங்கு போனார்கள் போலி பிரசாரத்திற்கு சிலர் பயந்து ஏமாந்து விட்டர்கள் மீண்டும் மாகாண சபை தேர்தல் காலத்தில் தேயிலை மலைகளுக்கு வருவார்கள் இனியும் போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் விரைவில் அமைச்சு பதவிகளில் மாற்றம் வரும் என்றார்கள் எனக்கு அமைச்சு பதவி இருந்தாலும் இல்லவிட்டாலும் உங்களுடனே இணைந்திருப்பேன் என்றார் மலையக பெண்களின் குரல் அரசியல் களத்தில் பலமாக ஒலிக்கும் என தெரிவிக்கின்றேன் என்றார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -