தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்ப்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்துக்காக ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கீட்டில் சீமெந்து பொதிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்தச் சீமெந்து பொதிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவரும், நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமான பா.சிவநேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச்செயலாளர் பி.கல்யாணகுமார் ஆகியோர் ஆலய நிருவாகசபையினரிடம் ஒப்படைப்பதை இங்கு படங்களில் காணலாம்.