கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாகவே தவிசாளர் பதவியை விட்டுக் கொடுத்தேன். விரும்புகின்ற நேரத்தில் அதனைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்! உப தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை


உப தவிசாளரின் ஊடகப்பிரிவு-
27 ஆம் திகதி அமையைப் பெற்ற நிந்தவூர் பிரதேச சபையின் ஆட்சியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளததோடு அதன் தவிசாளராக முன்னாள் தவிசாளராகவிருந்த எம்.ஏ.எம். தாஹிர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, தான் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உப தவிசாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளருமான வை.எல். சுலைமாலெவ்வை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

எமது கட்சியுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு தவிசாளர் பதவியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு துணைத் தவிசாளர் பதவியும், பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தவிசாளர் பதவியும், அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு துணைத் தவிசாளர் பதவியும் பெற்றுக் கொள்ள இணக்கம் காணப்பட்டதையடுத்து கடந்த 26 ம் திகதி எமது கட்சித் தலைமையலுவலகத்தில் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது பற்றி எனக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதும் நிந்தவூர் பிரதேச சபையானது 06 - 06 எனும் ஆசன நிலையில் காணப்பட்டதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுவதோடு, அந்தக் கட்சி விரும்புகின்ற நேரத்தில் தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற நிந்தவூர் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் துணைத்தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கௌரவ உறுப்பினர் கே.எம்.எம். ஜாரிஸ் என்னை தவிசாளராக பிரேரிக்க அக்கட்சியைச் சேர்ந்த கௌரவ உறுப்பினர் எம்.ரி. சப்ராஸ் அதனை ஆமோதித்தார்.

இதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முன்னாள் தவிசாளராகவிருந்த எம்.ஏ.எம். தாஹிர் மீண்டும் அந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டபோதும் கட்சியுடன் நான் கொடுத்த ஒப்புதலுக்கும், கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாகவுமே தவிசாளர் பதவியை விட்டுக் கொடுத்தேனே தவிர கோடிகளுக்கு சோரம் போய், பதவி மோகம் கொண்டு அந்த அமர்வில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடயமானது குறிப்பிட்ட சிலரால் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி பிழையாக விமர்சிக்கப் படுவதோடு, எனது அரசியல் பயணத்தினையும் தவறாக விமர்சித்து வருகின்றனர்.

இருந்தபோதும் சவால்களைக் கடந்தே நிந்தவூரில் அரசியல் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் இந்த சூழ்நிலையில் எனக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களையும், அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் எனவும், இன்றிலிருந்து நிந்தவூரில் அபிவிருத்திக்காக கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து ஒற்றுமையுடன் செயற்பட அனைவரும் முன்வருமாறு கேட்டுக் கொண்டதோடு, தனக்கு வாக்களித்த, வெற்றியின் பங்காளிகளாகவிருந்த அனைவரிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -