அனுராதபுர மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள ஜனாஸா நலன்புரிச்சங்களுக்கு அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து சுமார் 5500/- பெறுமதியான நீர் தாங்கிகளை வழங்கி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் கலாவெவயில் அமையப்பெற்றுள்ள மக்கள் சந்திப்பு கிளையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுடன் இம்முறை பலாகல, கல்னேவ, கெக்கிராவ, இப்பலோகம ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன, மத, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஓர் எண்ணப்பாட்டுடன் ஒன்றிணைந்து நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தனது இச்சேவையானது கட்சி வேறுபாடின்றி தான் செய்வதாகவும், தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் இறுதிவரை இச்சமூகத்திற்காய் செய்வேன் என்றும் இந்நிகவில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் தெரிவித்தார்கள்.