கண்டி சம்பவத்தையடுத்து இனவாத கருத்துக்கள் வீண் வதந்திகள் பரவாமலிருக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப் உட்பட சமூக வளைதளங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்த கலந்துரையாடல் ஒன்று குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்தே பேஸ்புக் , வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்கள் இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு தற்காலிகமாக முடக்கியிருந்தது. 72 மணித்தியாலயங்களுக்கு மட்டுமே இக்கட்டுப்பாடு என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக இவை முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -