2017 க.பொ.த.சாதாரணப் பரீட்சை 5116 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இதில் 688573 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். 28.03.2018 நள்ளிரவில் இதன் பெறுபேறுகள் வெளியாயின. இதன் அடிப்படையில் 9960 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தியைப் பெற்றுள்ளனர். இப்பேறுகளை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சி தென்படுகிறது.
ஆக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அக் அல்-முனவ்வரா கணிட்ட கல்லூரியில் கல்வி கற்ற எம்.எ.எம்.அல்பர் சப்னி என்பவர் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவரின் கற்றல் யுத்திகளைப்பற்றி வினவியபோது பின்வரும் விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. மேலும் தனது வெற்றிக்கு எல்லாம் வல்ல இறைவனும், பாடசாலை சமுகமும், பெற்றோரும் பெரும் உறுதுணையாக இருந்ததாக முதலில் தெரிவித்தார்.
அனுபவப் பகிர்வு
1. கற்கும் பாடங்களை அன்றன்று மீட்டுதல்
2. பாடசாலைக் கல்வி,தனியார் துறைக் கல்வி இரண்டையும் உச்ச அளவில் பிரயோசனப் படுத்தியமை
3. அதிகம் கடந்தகால வினாத்தாள்கள்,மாதிரி வினாத்தாள்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி பயிற்சி பெற்றமை
4. சிறந்த பெறுபேறுபெற்ற சீனியர் மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டு அறிந்தமை
5. சினிமா,குறுநாடகம் என்பவற்றைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டாமை
6. அந்நூர் நிறுவனம் ஊடாக தலைமைத்துவம்,ஆன்மிகப் பயிற்சி பெற்றமை
7. முதியோர்களின் எனக்கான துஆக்கள்
8. மட்டுப்படுத்தப்பட்ட விளையாட்டுக்கள்.
9. கற்றல் ஆர்வம் உள்ள நல்ல நண்பர் குழாம்.
10.செல்லிடத் தொலைபேசி பாவனை இன்மை.
11.விடாமுயற்சி, காலநேரம் கிடைத்தபோதெல்லாம் கற்றலில் ஈடுபட்டமை.
இவ்வாறான அனுபவப் பகிர்வுகளை மனதில் இருத்தி எதிர்கால தம்பி, தங்கையர் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். இவர் எதிர் காலத்தில் அல்லாஹ்வின் கிருபையால் ஒரு பொறியியலாளராகி நாட்டிற்கும், சமூகத்திற்கும் சேவை செய்ய ஆசைப்படுகிறார்.
இவர் கே.சீ.எம். அஸ்ஹர் (முசலி) ஏ.எல். ஜெமீனா (அக்கரைப்பற்று) ஆசிரியர் தம்பதிகளின் இரண்டாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.