பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல், ”ஒருமித்து கல்வி கூடத்தில் ஒன்று படுவோம்’ எனும் தொனிப்பொருளில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற அனைவரையும் ஒன்றாக இணைத்து பாடசாலையில் ஓர் குடும்பமாக ஒன்று கூடும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒன்று கூடலும் சிறப்பு நிகழ்வுகளுமாக சிறப்பாக நடைபெறவுள்ளது.
பழைய மாணவர்களுக்கான ஒன்று கூடல் காலை 9.00 மணிக்கு நடைபெற்று பி.ப 3.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், பழைய ஆசிரியர்கள் கௌரவிப்பும், பழைய மாணவர்களின் குழந்தைகளுக்கான நிகழ்சிகளுமாக பாடசாலை குடும்ப ஒன்று கூடல் நடைபெறும்.
பாடசாலையில் கல்வி பயின்ற அனைவரும் மீண்டும் ஒரு முறை பாடசாலையில் ஒரே நாளில் கூடி செல்லும் பொன்னான நாளை எல்லோரும் கூடி சிறப்பிப்போம் என கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அழைப்பு விடுக்கிறது.
இந்த ஒன்று கூடலின் போது பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்களின் சிறப்பான பல கலை நிகழ்ச்சிகளும் அனைவரும் கூடி உண்டு மகிழும் இராப்போஷன ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலையின் அனைத்து கல்வியாண்டு பழைய மாணவர்களும் பங்குபற்றலாம் இதற்கான நுழைவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும் மேலதிக விபரங்களுக்கும் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
0773664324
0774124338
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -