புறக்கணிப்பினால் வீழ்ச்சிப் பாதையில் இருக்கும் சாய்ந்தமருதை மீட்டெடுக்க சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமைத்துவத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டி மக்கள் புரட்சிக்கு தலைமை தங்கிய வரலாற்று நாயகன் வை.எம்.ஹனிபாவையும் அவருக்குத் தளபதிகளாக செயற்பட்டு கல்முனை மாநகரசபைக்காக பள்ளிவாசலின் சார்பில் களமிறங்கி அனைத்தையும் வென்ற வெற்றி நாயகர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றினை சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு தலைவர் ஏ.எல்.ஏ.சமட் தலைமையில் 2018-03-31 ஆம் திகதி சீ பிரீஸ் உணவக கேட்போர் கூடத்தில் நடாத்தியது.
செயலாளர் எம்.பி.ஏ.றஹீம் மற்றும் பொருளாளர் என்.எம்.ஏ.ஜௌபர் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அஸீம், என்.எம்.றிஸ்மிர்,எம்.வை.எம்.ஜௌபர், எம்.ஏ.றபீக்,எம்.ஐ.அப்துல் அஸீஸ், முஹர்ரம் பஸ்மிர், பிரதேசசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மிர் ஆகியோர் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிராந்தியத்தில் பிரபல்யமிக்க சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு சாய்ந்தமருதின் நவம்பர் புரட்சியில் முன்வரிசையில் நின்று போராடிய அதேவேளை புரட்சிக்கு முன்னரும் சாய்ந்தமருது உள்ளுராட்சிசபைக் கோரிக்கை விடயத்தில் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.