அட்டனில் இலங்கை மத்திய வங்கியின் நடமாடும் சேவை

க.கிஷாந்தன்-
ட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் வேண்டுக்கோளுக்கு ஏற்ப நடமாடும் சேவையொன்று 18.03.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டன் புருட்ஹில் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவைக்கு இலங்கை மத்திய வங்கியும், அதன் நுவரெலியா பிதேச காரியாலயமும், நுவரெலியா மாவட்ட செயலகமும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தன.
இலங்கை மத்திய வங்கியும் நுவரெலியா பிரதேச காரியாலயமும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் காணப்பட்ட பல்வேறு விடயங்களை தெளிவுப்படுத்தியதுடன் அதில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுத்தனர்.

இங்கு ஊழியர் சேமலாப நிதி பதிவில் காணப்பட்ட பெயர் மாற்றம், ஒப்பத்தில் வித்தியாசம் பதிவவு இலக்கத்தில் காணப்பட்ட சிக்கல்கள் என்பன தீர்க்கப்பட்டன.
நுவரெலியா பிரதேச செயலகம் இங்கு பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை சார்ந்த பல்வேறு விடயங்களை முன்னெடுத்து இருந்தது.

இந்த நடமாடு சேவையின் போது புகைப்படம் உட்பட தேவையான ஆவணங்கள் அனைத்தும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -