"நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள் " ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ஸ்ரீ லங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்ற ஏற்பாட்டில் கொழும்பு ஆமர் வீதி பிரைட்டன் ரெஸ்ட் ஹோட்டலில் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி மாலை 4.15 க்கு நடைபெறும்.
மன்றத் தலைவர் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் நூல்களின் முதல் பிரதிகளை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் , சூட்டர்ஸ் நிறுவன நிர்வாகப் பணிப்பாளர் எம். ஜீ. எச். அக்ரம் ஆகியோர் பெற்றுக் கொள்வார்கள்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும், அரசாங்க சேவைகள் ஆணைக்குழு ஆணையாளருமான ஹுசைன் இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம்.கே.எம். யூனூஸ் சிறப்பதிதியாகவும் கலந்து கொள்வர்.
ஞாயிறு தினக்குரல் பிரதம ஆசிரியர் ஆர். பாரதி, தினகரன் வாரமஞ்சரி முன்னாள் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் ஹாபிஸ் எஸ்.எம். ஹனீபா ஆகியோர் வாழ்த்துரைகளையும், சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் சனூஸ் முஹம்மத் பெரோஸ், ரூபவாஹினி கூட்டுத்தாபன தயாரிப்பாளர் முபாரக் மொஹிதீன் ஆகியோர் நூல் நயவுரைகளையும் வழங்குவர்.
சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் வரவேற்புரை வழங்க வகவ செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈழகணேஷ், மத்திய மாகாண முதலமைச்சரின் இணைப்பதிகாரியான ரஷீத் எம் றியாழ், சட்டத்தரணி நூருஸ் ஷப்னா சிராஜுதீன் ஆகியோர் கவி வாழ்த்துகளையும் வழங்குவர்.