நேற்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்; விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
நூக்கான் விமானப்படை விமானத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் தலைமையிலான உயர்மட்ட ராஜதந்திரிகள் வரவேற்றார்கள். இங்கு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தில் உயர்மட்ட சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹூசைன், பிரதம மந்திரி ஷஹீட் அபாசி ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார். இருதரப்பு வர்த்தக, பொருளாதார, கல்வித்துறை உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவது பற்றி விசேட கவனம் செலுத்தப்படும். கல்வி, சுற்றுலா துறைகள் சார்ந்து நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.