நேற்று கேகாலையில் இடம்பெற்ற சமய நிகழ்ச்சியொன்றில் பிரதமர் உரையாற்றினார்.
70ம் ஆண்டுகளில் இலங்கையை விட ஆகக்குறைந்த அபிவிருத்தி மட்டத்தில் இருந்த சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகள் இலங்கையைத் தாண்டிச் சென்றுள்ளன. கடந்த 40 வருடங்களை கருத்திற்கொண்டால் 30 வருட கால யுத்தத்தையும் சமாளித்துக் கொண்டு இலங்கை ஓரளவு அபிவிருத்தி கண்டுள்ளது என பிரதமர்சுட்டிக்காட்டினார்.;.
எவ்வாறேனும், கிராமப்புற மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு பரந்த வேலைத்திட்டம் அமுலாக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். இலங்கை வாழ் பௌத்தர்கள் மற்ற மதத்தவர்களை மதித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடந்த கால அசம்பாவிதங்கள் மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்க்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.