மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு


கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தெரிவான அங்கத்தவர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

சத்தியப்பிரமாண வைபவம் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. அவர்கள் முன்னிலையில் 60 பேர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
எதிர்காலத்தில் பொறுப்புக்களை மென்மேலும் சிறப்பாக நிறைவேற்றி மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகத் பிரதமர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பத்தாண்டு காலத்திட்டத்தை அமுலாக்க வேண்டும். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோயை ஒழிப்பதும் அவசியம். தொகுதிவாரியாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் தத்தமது தொகுதிகளில் சிறப்பாக கடமையாற்ற வேண்டுமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக சத்தியப்பிரமாணம் செய்த கொண்ட ரோஷி சேனாநாயக்கவும் உரையாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சி 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -