கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் வெள்ளைமணல், ஹிஐ்ரா நகர் பகுதியைச்சேர்ந்த நவீட் இலாகி (21 வயது) மற்றும் வெள்ளைமணல், நீரோட்டுமுனை பகுதியைச்சேர்ந்த இரானுவ வீரரான பாஹீம் அக்ரம் (22 வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர்களின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.