மூதூர் ஷாபி நகர் கிராம சேவகர் பிரிவின் மூன்று குக்கிராமங்களில் ஒன்றான நூரணியாவின் பிரதான வீதியோரமாக புதிதாக நிறுவப்பட்ட கைக்தறிய நெசவாலையினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் எளியமையான வைபவம் இம்மாதம் 9ம் திகதி காலை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலர் ஏ. தாஹீர், முஸ்லிம் எய்ட் யுகே அமைப்பின் தொண்டர் ஊழியர் செவ்வி சத்தார் மிர்ஷா ஆகியோருடன் முஸ்லிம் எய்ட் ஊழியர்கள் மற்றும் பெண் பயனாளிகள் கலந்து கொண்டனர். இத்துடன் முஸ்லிம் எய்ட் அநுசரணையுடன்; கிராம அபிவிருத்திக் கொமிட்டியின் ஏற்பாட்டில் தாய்-சேய் சுகாதார பராமரிப்பு நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலியினை ஊர் மக்கள் இணைந்து சிரமதான முறையில் அமைத்தனர்.
யுத்தம், வெள்ள அனர்த்தம் போன்றவற்றினால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்த ஷாபி நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள பெண்கள் கடந்த காலங்களில் குடும்ப வருமானத்தை ஈட்டுவதற்காக தமது குடும்பங்களைப் பிரிந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையைத் தவிர்க்கவும் வறுமை ஒழிப்பினை இலக்காகவும் கொண்டு சிறிலங்கா முஸ்லிம் எய்ட் நிறுவனம் இக்கிராமங்களிலுள்ள பெண்களுக்கான கைத்தறி நெசவுத் தொழில் முயற்சியுட்பட பல்வேறு கருத்திட்டங்கள் அடங்கிய நிகழ்ச்சித் திட்டத்தினை இவ்வருடம் ஆரம்பித்தது.
552 குடும்பங்கள் வாழ்கின்ற ஷாபி நகர் கிராம சேவகர் பிரிவில் வறிய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் மற்றும் போசாக்குணவுத்திட்டம், மேலதிக மாலை நேர வகுப்புகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களுக்கான போசாக்குணவு,இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி மற்றும் சிறு தொழில்கள், ஆடு வளர்ப்பு,சிறு அளவிலான நவீன விவசாயப் பண்ணைகள், ஒன்றிணைந்த நன்னீர் மீன் மற்றும் வாத்து வளர்ப்பு போன்ற பல்வேறு கருத்திட்டங்கள் மேற்படி ஷாபி நகர் சமூக பொருளாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -