கலைக்கப்பட்டுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல்களை உடன் நடத்த வேண்டும் -கணபதி கனகராஜ்


தலவாக்கலை பி.கேதீஸ்-
லைக்கப்பட்டு ஆளுனர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவருகின்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை உடன் நடத்துவதுடன், ஏனைய மாகாணசபைகளுக்கான தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்காகவே புதிய மாகாணசபை தேர்தல் சட்டத்தை அரசாங்கம் அவசரமாக பராளுமன்றத்தில் நிறைவேற்றியது. எதிர்வரும் வாரத்தில் மாகாணசபை எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட ஆணைகுழுவின் அறிக்கை பாரளுமன்றத்தின் அனுமதியை பெருவதற்காக மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குகள் கிடைத்தால் மட்டுமே மாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமென உள்ளுராட்சி மாகாணசபைகளுக்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தாபா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலையில் தேர்தல் நடக்ககூடாது என விரும்பும் தரப்பினர் மாகாணசபை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மூன்றில் இரண்டு வாக்குகளை கிடைக்கவிடாமல் செய்து அதன்மூலம் தேர்தலை பின்போட முனைந்தால் அதற்கு என்ன மாற்றுவழி என அமைச்சர் தெரிவிக்கவில்லை. இது மாகாணசபை தேர்தல்கள் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மாகாணசபைகளுக்கு புதிய முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ளது. ஆயினும் தற்போது ஆணைக்குழு திரட்டிவைத்துள்ள தகவல்களை கொண்டு அவை மிக குறுகிய காலத்தில் திருத்தப்படக்கூடியவையே. புதியதாக அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறையிலான தேர்தலில் ஐம்பது வீத தொகுதிகனை உருவாக்குகின்ற போது பல மாவட்டங்களில் சிறுபாண்மை மக்களுக்கான தொகுதிகளே உருவாக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

 அத்துடன் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படவிருக்கின்ற ஐம்பது வீத உறுப்பினர்களின் தெரிவு தேர்தலுக்கு பின்னரானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருப்பதை அவதானிக்கமுடிகிறது இதனால் மாவட்ட மட்டத்தில் சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பிரதிபளிக்காத தேர்தல் முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓவ்வொரு மாவட்டத்திலும் சிறுபாண்மை மக்களுக்கென தனியான சிறிய தொகுதிகளை உருவாக்கி சிறுபான்மை மக்களின் மாகாணசபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.சில அரசியல் கட்சிகள் தத்தமது தேர்தல் வாய்ப்ப்புக்களின் அடிப்படையில் பழைய வீதாசார தேர்தல் முறையில் நாட்டம் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. அவ்வாறு பழைய வீதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படுமானால் அரசாங்கம் திறந்த மனதோடு உடனடியாக தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகளை பாராளுமன்றத்தின்னூடாக மேற்கொள்ள வேண்டும். 

 சகல மாகாணசபைகளுக்குமாக தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்காகவே புதிய சட்டங்களை உருவாக்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். தற்போதய நிலையில் சகல மாகாணசபைகளும் நான்கு வருடங்களை கடந்து செயற்படுவதால் தற்போது எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிட்டு ஒரே நாளில் தேர்தலை நடத்த முடியும். எனவே அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையை மதித்து மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -