லொறி - பஸ் விபத்து

க.கிஷாந்தன்-
ட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை ரொசல்ல பகுதியில் வாகனங்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளாகியதில் வட்டவளை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் சிறிய காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து 17.03.2018 அன்று மாலை சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டனிலிருந்து பொலன்னறுவ பகுதியை நோக்கி சென்ற சிறிய லொறி ஒன்றும், கொழும்பிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற பஸ் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளையில் விபத்துக்குள்ளான வாகனங்களை பரிசீலித்து அப்புறப்படுத்தும் போது நடவடிக்கையில் ஈடுப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு இவ்வாறு காயம்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் இப்பகுதியில் சீரற்ற காலநிலையினால் பிரதான வீதியில் வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த இரு வாகனங்களும் அதிக வேகத்துடன் பயணித்ததனால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -