தழிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இளைஞர் முகாமின் நோக்கம்


ளைஞர் முகாம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தழிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவதே என்று தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் ஹெரந்திக்க ஹெலியங்கே தெரிவித்தார்.
1984 ஆம் ஆண்டில் இளைஞர் முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இளைஞர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான அடித்தளம் அமைக்கும் நோக்கிலேயே இது ஆரம்பிக்கப்பட்டது என்று தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் ஹெரந்திக்க ஹெலியங்கே தெரிவித்தார்.

இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தி அவர்கள் மத்தியில் மறைந்திருக்கும் ஆற்றலை மேம்படுத்தி அவர்களை சமூகத்தில் அறிமுகப்படுத்துவது மற்றுமொரு நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1983 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி இளைஞர் அலுவல்கல் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சராக பணியாற்றிய பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இலங்கை இளைஞர் சமூக சம்மேளனத்தை அமைத்தார்.

அதனை தொடர்ந்து இளைஞர் முகாம் ஆரம்பமானது. இம்முறை இளைஞர் முகாம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் 5 நாட்கள் நிக்கரவெட்டி கால்நடை வள சபை வளவை கேந்திரமாக கொண்டு நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -