உடல் ஆரோக்கியம் மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள்

பைஷல் இஸ்மாயில் -
திமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டலில் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் உடல் ஆரோக்கியம் மற்றும் தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலும் இடம்பெற்று வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நாளை (24) சனிக்கிழமை காலை 7.30 மணி தொடர்க்கம் 6.00 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும், இந்தப்போட்டிகள் 7 அங்கங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்குள் இடம்பெறுகின்ற இந்த விளையாட்டுப் இப்போட்டி நிகழ்ச்சிகள் யாவும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் முதலாவது நிகழ்வாக நடைபவனி மற்றும் உடற்பயிற்சி காலை 7.30 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானம் வரை சென்றடைந்து அங்கு இடம்பெறுகின்ற உடற்பயிற்சியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 8.30 மணி தொடர்க்கம் 2.00 மணிவரை திணைக்கள ரீதியாக கிரிக்கட் சுற்றுத் தொடர் இடம்பெறவுள்ளதாகவும், 2.30 மணி தொடர்க்கம் 3.30 மணிவரை கிரிக்கட் சுற்றின் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.
மேலும், 3.30 மணி தொடர்க்கம் 4.30 மணிவரை பிரதேச செயலக அணிக்கும், தென்கிழக்கு பல்கழைக்கழக அணிக்கும் இடையிலாளான உதைப்பந்தாட்டப் போட்டி இடம்பெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 4.30 மணி தொடர்க்கம் 5.00 மணிவரை திணைக்கள ரீதியான கயிறுழுத்தல் போட்டியும் இறுதி நிகழ்வாக பரிசளிப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -