பொது மக்கள் பொலிஸாரோடு இணைந்து செயற்பட்டால் வன்முறைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜய நித்தி 
பி.எம்.எம்.ஏ.காதர்-
பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது பொது மக்கள் பொலிஸாரோடு இணைந்து செயற்பட்டால் வன்முறைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜய நித்தி தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் விரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான விஷேட கூட்டம் சனிக்கிழமை(10-03-2018)மாலை பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிதின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த விஷேட கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகள்ääசமயத் தலைவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் கலந்த கொண்டனர்.

இங்கு பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜய நித்தி மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது இஞைர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் இதனால் பலர் கைது செய்யப்பட்டு சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இதன் காரணமாக பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அரச தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்முடியாத நிலை ஏற்படுகின்றது.அது மாத்திரமன்றி தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான நற்சான்றிதழ்களைப் பெறமுடியாமல் போய்விடுகின்றது.

எனவே சமயத் தலைவர்களும்,பெற்றோர்களும் தங்கள் பிளளைகள் பிரச்சினைகளில் ஈடுபடால் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் இல்லையேல் நாம் எல்லோரும் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -