பிரதேசபைக்குத் தெரிவான சு.கட்சி உறுப்பினர் ஜாகீர் சொந்தநிதியில் பள்ளிவாசல் பெண்கள் பகுதிக்கான கொங்கிறீட்ஏணி அமைப்பு!

காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு பிரதேச சபையில் மாளிகைக்காடு வட்டாரத்தில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெற்ற காரைதீவு முஸ்லிம் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அப்துல் மஜீட் ஜாஹீர் தனது சொந்த நிதியில் மாளிகைக்காடு கிராம அபிவிருத்திற்காக மாளிகைக்காடு கிழக்கில் அமைந்துள்ள அந்நூர் ஜும்மா பள்ளிவாயலின் மேல்மாடியில் பெண்கள் தொழுகைக்கு செல்வதற்கான வெளியக ஏணிப்படிக்கான கொங்கிரீட் இடல் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

பிரதேசபை உறுப்பினராக இன்னும் பதவிப்பிரணமாணம் செய்யாதநிலையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட முதலாவது வேலைத்திட்டத்தை தனது சொந்தநிதியிலிருந்து ஆரம்பித்துவைத்தமை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

அவரது அரசியல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்த மாளிகைக்காடு கிராம அபிவிருத்திற்காக மாளிகைக்காடு கிழக்கில் அமைந்துள்ள அந்நூர் ஜும்மா பள்ளிவாயலின் மேல்மாடியில் பெண்கள் தொழுகைக்கு செல்வதற்கான வெளியக ஏணிப்படிக்கான கொங்கிரீட் இடல் திட்டம் அவரது சொந்த நிதியில் 16.02.2018 வெள்ளிக்கிழமை தினத்தன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அந்நூர் ஜும்மா பள்ளிவாயலின் பேஷ் இமாம் ஏ.ஆர்.எம். சப்ராஸ் அஸ்ஸஃதி தலைமையில் பள்ளித்தலைவர் அல்ஹாஜ் ஏ.பௌசர், செயளாளர் ஏ.ஏ.றியாஸ், பொருளாளர் ஏ.ஏ. மஜீட், நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு துஆ பிரார்த்தனையுடன் வெற்றிவேட்பாளர் அப்துல் மஜீட் ஜாஹீர் முதல்கட்ட கொங்கிரீட் இடலினை ஆரம்பித்து வைத்தனர்.

இறுதியில் அவரது வெற்றியைக்கொண்டாட கிராம மக்களுடன் மாளிகைக்காட்டின் உள்வீதிகளில் கோலாகலமாக ஊர்வலம் சென்றனர். அதன்போது ஜாகீருக்கு மாலை அணிவிக்கப்பட்டு பட்டாசு கொழுத்தி மக்களால் வரவேற்பளிக்ப்பட்டது.
காரைதீவு பிரதேச சபையில் மாளிகைக்காடு வட்டாரத்தில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெற்ற காரைதீவு முஸ்லிம் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அப்துல் மஜீட் ஜாஹீர் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவரது அரசியல் வெற்றிக்காக வாக்களித்த மாளிகைக்காடு மக்களுக்கு அளவுகடந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -