காரைதீவுப்பிரதேசசபைக்கான உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் விகிதாசார அடிப்படையில் எமது கட்சிக்குக்கிடைத்த ஒரு ஆசனத்தை இருவருக்கு பகிர்ந்தளிக்கஉள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவுப்பிரதேச அமைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.
அதற்கான உடன்படிக்கையும் எனது முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதன்படி முதல் இருவருடங்களுக்கு முத்துலிங்கம் காண்டீபன் என்பவருக்கும் இரண்டாவது இருவருடங்களுக்கு கந்தசாமி ஜெயதாசன் என்பவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இன்று(27) முத்துலிங்கம் காண்டீபன் காரைதீவு பிரதேசசபையின் முதல் அமர்வில் பங்கேற்கிறார்.