அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில், முஸ்லிம்களுக்கெதிரான கண்டி வன்முறைச்சம்பவத்தின் போது முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறிய பிரதமரையும், அரசாங்கத்தையும் பிரதி அமைச்சர்ஹரீஸ் காட்டமாக விமர்ச்சித்திருந்தார். இந்த விமர்சனம் அரசாங்கத்துக்குள் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது எனசுற்றிகாட்டிய கட்சியின் முக்கிய உயர்பீட உறுப்பினர்கள் சிலர், பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு எதிராக கட்சி ஒழுக்காற்றுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர். இந்த ஒழுக்காற்று நடவடிக்கையினை பெரும்பாலான உயர்பீட உறுப்பினர்கள்எதிர்த்ததனால் அது அவ்விடத்திலேயே கைவிடப்பட்டது.
கட்;சியின் உயர்பீட கூட்டத்தில் முடிவுற்ற ஒரு சம்பவத்தினை முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் ஊதி பெருக்கவைத்தமையானது பிரதி அமைச்சருக்கும் கட்சிக்கும் கட்சித் தலைமைக்குமிடையிலுள்ள நல்லுறவில் விரிசலைஏற்படுத்துவதற்கு எடுக்கின்ற முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
உயர்பீட கூட்டத்தில் நடந்த சம்பவத்தை உயர்பீடத்தில் இல்லாத சகோதரர்கள் பிரதி அமைச்சருக்கு எதிராக யாரும் ஒழுக்காற்றுநடவடிக்கை எடுக்க சொல்லவில்லை என எழுதியிருப்பதானது உண்மைக்கு புறம்பான கவலை தருகின்ற விடயமாகும். சம்பவம்இடம்பெற்றது என்பது உண்மை ஆனால் அது பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது என்பதுதான்உண்மையான விடயமாகும்.
சமூகத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு எதிராக பிரதி அமைச்சர் ஹரீஸ் குரல் கொடுக்கவும் களத்தில் நிற்கவும் தயங்காதவர்.கண்டியில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தாக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் முஸ்லிம்களுக்குரிய பாதுகாப்புவிடயத்தில் கூடிய கவனமெடுக்காததன் நிமித்தம் அதற்கான அழுத்தத்தினை அரசாங்கத்திற்கு கொடுப்பதற்காகவே பிரதிஅமைச்சர் ஹரீஸ் பிரதமரை விமர்சித்திருந்தார். இதில் யாரும் பிழை காண முடியாது.
எதிர்காலத்தில் சமூகத்திற்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் இது போன்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளினால்பிரதி அமைச்சர் ஹரீஸின் மக்களுக்கான குரலை அடக்கிவிடவும் முடியாது.
2002ம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல்வேறு வன்முறைச் சம்பவங்கள்பாதிப்புக்கள் வந்தபோது பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்ற பகிஷ்கரிப்பு முதல் பாராளுமன்ற சத்தியாக்கிரகம் வரைசமூகத்திற்காக தன்னை முழுயாக அற்பணித்து குரல் கொடுத்து போராடியதுடன் ஆட்சியாளர்களையும் கண்டித்து பேசிய ஒருஅரசியல் தலைமை என்பதை இன்றும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனைந்ததையிட்டு கட்சியின் போராளிகள்,நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள், சிவில் அமைப்புக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களது ஆதங்கத்தினை சமூகவளைத்தளங்கள் ஊடாக வெளியிட்டமை முஸ்லிம் சமூகம் அவர் மீது வைத்துள்ள பற்றை பறைசாற்றி நிற்கின்றது.
ஒழுக்காற்ற நடவடிக்கை விவகாரத்தினை கட்சிக்கு எதிரானவர்கள் பிழையான கோணத்தில் விமர்ச்சித்து கட்சிக்கும் கட்சித்தலைமைக்கும் பிரதி அமைச்சருக்கும் முரண்பாடு தோன்றியுள்ளது என மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தமுற்பட்டடுள்ளனர். இந்நடவடிக்கையினால் பிரதி அமைச்சர் கட்சியுடனோ, கட்சித் தலைமையுடனோ முரண்படப் போவதில்லைஎன்பதை மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
பிரதித் அமைச்சர் ஹரீஸ் கட்சியுடன் கூடிய அபிமானம்; கொண்டவர். கட்சியின் பிரதித் தலைவர் என்ற வகையில் கட்சியின்வளர்ச்சி நடவடிக்கைகளில் வழமை போன்று செயற்பட்டு வருகின்றார். சிலர் கூறுவது போன்று அவர் கட்சியை விட்டு ஒதுங்கிஇருக்கவில்லை என்பதையும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
கண்டி இன வன்முறைச் சம்பவம் நடைபெற்று அதன் வடு மக்கள் மத்தியில் மாறாத நிலையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மீதானஒழுக்காற்று நடவடிக்கை விவகாரத்தை தூக்கிப்பிடித்து விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திவிட்டு எமது சமூகத்திற்கு இன்றுஏற்பட்டுள்ள சவால்களை முறியடிக்க சகலரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும்.
மேலும் பிரதி அமைச்சர் ஹரீஸின் விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்காலநடவடிக்கைகளுக்கும், சமூக நலன் விடயத்திலும் சகலரும் ஒன்றிணைந்த செயற்பட முன்வர வேண்டும் எனவும்அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.