அதிகாரங்களை உரிய முறையில் கையாண்டு மக்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் -எம்.திலகராஜ்


தலவாக்கலை பி.கேதீஸ்-
பெண்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீதம் இடம் வழங்கப்படவேண்டும் என்ற சட்ட நிபந்தனையில் பல நடைமுறைச் சிக்கல் இருக்கத்தக்கதாக எப்படியோ நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் இதுவரை இல்லாத எண்ணிக்கையான அளவில் பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக வருவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வாய்ப்பின் ஊடாக கிடைக்கப்பெறும் அதிகாரங்களை உரிய முறையில் கையாண்டு மக்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வுகள் மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தில் மகளிர் அணித்தலைவியும் மத்தியமாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் கலந்துகொண்டிருந்ததோடு சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா, எம்.ராம், எம்.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளதுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட சுரேஸ்குமார், ராஜ்குமார், அர்ஜுன், ஆனந்தன், சுப்ப்ரமணியம், ராஜ் அஷோக் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவாகின்ற பட்சத்தில் அந்தந்த சபைகளுக்கு ஏற்றவாறு உரிய உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடைக்கின்றது. அந்த அடிப்படையில் கடந்த உள்ளூராட்சி மன்றத்தில் போட்டியிட்டு தெரிவான பெண்கள் இதுநாள் வரை தமக்கு இல்லாத அதிகாரங்கள் சில கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படவேண்டும். முன்னைய அம்பகமுவை பிரதேச சபையை மூன்றாக பிரித்து மஸ்கெலியா, நோர்வூட் பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது அதிகார பகிர்வின் ஒரு அம்சமாகும். இந்த அதிகார பகிர்வினை நாம் பாராளுமன்ற, அமைச்சரவை அதிகாரங்களைப் பயன்படுத்தியே பெற்றுக்கொண்டுள்ளோம். அதுபோலவே பிரதேச சபை உறுப்பினராக உங்களுக்கு கிடைக்கக்கூடியதான அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தி கிடைத்திருக்கும் அதிகாரங்களை உரிய முறையில் கையாள வேண்டும்.
சிலர் அமைச்சராக அதிகாரத்தில் இருந்த காலத்தில் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்றால் அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகரிகளின் நாற்காலியில் உட்கார்ந்தார்கள். இது அதிகார துஸ்பிரயோகம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதே அமைச்சர்கள் தமக்கு அமைச்சுப்பதவி அதிகாரம் இல்லையென்றபோது அதே பொலிஸ் நிலையத்தின் வாசலில் வந்து உட்காருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -