ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முபைல் கடை திருட்டு-நான்கு சிறுவர்கள் கைது-படங்கள்



ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

ட்டக்களப்பு- சந்திவெளி பிரதான வீதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சீசீரீவீ காணொளியின் உதவியுடன் சிறுவர்கள் நான்கு பேர் 11.03.2018 ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுவர்கள் சந்திவெளி பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு  இல்லத்தைச் சேர்ந்த 10 , 12 மற்றும் 13 வயதுடையவர்களென தெரியவந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் கூறினர்.

இச்சிறுவர்களது தந்தையர் கடந்தகால போர்ச்சூழலின்போது மரணித்துவிட்டதாக தெரியவருகிறது.

இச்சிறுவர்கள் பராமரிப்பு ,ல்லத்திலிருந்து எவருக்கும் தெரியாமல் ,ரவு வேளைகளில் வெளியேறி சுமார் ஐந்நூறு மீற்றர் தொலைவிலுள்ள கைத்தொலைபேசி விற்பனை நிலையத்தின் கூரைவழியாக உள்ளேநுழைந்து தொலைபேசி கருவிகளை திருடியுள்ளனர். ,ச்சம்பவம் சீசீரீவீ கெமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் மறுதினம் அக்கடைக்குள் கூரைவழியாக இறங்கி கெமராக்களுக்கு சேதம் ஏற்படுத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -