சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு பொறிமுறை


காணாமல் போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நபர்கள் அடங்கலாக பொதுவான சட்டமுறையற்ற கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய சம்பவங்களை சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சு அவ்வப்போது அறிந்து கொண்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தனது சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை எப்பொழுதும் உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளது. இலங்கை பொலிசாருக்கு சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்படுகின்ற தருணத்தில் பொலிசார் அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி தகுந்த சட்டத்திற்கு அமைய அந்த சம்பவங்கள் பற்றி விசாரணைகளை நடத்துகின்றதா என்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

எனவே எவரேனும் தனிநபர் ஒருவரால் அல்லது குழுவினால் சட்ட முறையற்ற விதத்தில் இடையூறுக்கு உட்படுத்தப்பட்டால் அல்லது துன்புறுத்தப்பட்டால் வன்முறை சம்பவங்களுக்கு உட்படுத்தப்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அல்லது அத்தகைய செயல்களை அறிந்திருந்தால் 1960 அல்லது 0115-10-7722 என்ற தொலைபேசி இலக்கத்துடன் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின், 1996 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடனும் 0112-505-575 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும். பொலிஸ் பிரிவில் உள்ள புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின், 119 தொடர்பு கொள்ள முடியும். வெப் முகவரி www.telligp.police.lk என்பதாகும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வெளியிட்டுள்ள அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -