குடும்பத்தில் உள்ள பெண்கள், சிறுவர்கள் அனைவரையும் பாதுகாக்கின்ற பொறுப்பு ஆண்களுக்கு;தான் உள்ளது எனவும, ஆணின ஊடாகத்தான் குடும்பம் பராமரிக்கப்படுறது என்ற மனப்பாங்கு அனைவரிடமும் இருக்கிறது. இதனால்தான் ஆண்களுக்கு ஆதிக்கமும், அதிகாரமும் செல்கிறது. அதனூடாகத்தான் வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது. ஆணினது ஆதிக்கம் பெண்களைக் கட்டுப்படுத்தி அடிமைப்படுத்துகிறது. ஏன மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தினால் அதன் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் நடராசா மோகனதாஸ் தலைமையி;ல் வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இளைஞர், யுவதிகளுக்காக நடைபெற்ற பால்நிலை சமத்துவம் எனும் தொனிப்பொருளிலான செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்ட அஸீஸ் மேலும் கருத்துதெரிவிக்கும் போது,
பெண்கள் மீதான வன்முறைகள் ஆணாதிக்கத்தில்தான் உருவாகியது என நம்பவேண்டும். ஆதிக்கம் என்பது இடத்துக்கிடம் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பல்வேறு காலகட்டங்களில் இவை மாறுபடும். நவீனயுகத்தில் வாழ்கின்ற போது ஆணாதிக்கசிந்தனைகள் வேறு பரிணாமங்களைப் பெறுகின்றது. கூடுதலாக கிராமப்புறப் பெண்கள் கணவன்மார்களுக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுத்துவருகிறார்கள். ஆனால் அவர்களின் இரக்கநிலையினை உணராத ஆண்கள் மதுபோதைக்கு அடிமையாகி பெண்களை கொச்சையாக மரியாதைக் குறைவாக நடாத்திவருகிறார்கள். இதனால் அதிகமான பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு ஆசைகளை அடக்கி;க் கொண்டு பிள்ளைகளுக்காக வாழ்ந்துவருகின்றனர்.
பெண்கள் தாய்மாராக. முனைவியராக குடும்பத்தில் அனுபவிக்கும் உண்மையான நிலைமைகளிலிருந்து எழும் சிந்தனைகள் உயிர்வாழ்வதற்கான அதி முக்கிய தேவைகளாகும். நமது கலாசாரத்தின்படி பெண்கள் மரியாதையான ஆடை அணிவது, கணவனுக்கு பணிவிடை செய்வதை நாம் மட்டுப்படுத்தமுடியாது.
இன்று பெண்கள் மீதான அடக்கு முறைக்கெதிரான மாற்றுக் கருத்துக்கள் சரியாக முன்வைக்கவேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் உள்ளது. பெண்கள் பொறுமை,அடக்கம் போன்றகுணாதிசயங்களைக் கொண்டிராதசந்தர்ப்பத்தில் பெண்மை இழந்தவள் என்று இந்தச் சமூகம் முத்திரையிடுகிறது. எதுஎவ்வாறிருப்பினும் ஒரு பெண்ணின் ஆதரவு இன்றி எந்தத் தனிமனிதனும் முன்னேறியவரலாறு கிடையாது என்பதை அனைவர்களும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் எனமேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.