மஹியாங்கனை பகுதியிலிருந்து அட்டன் பகுதிக்கு 3 கியூப் மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் பத்தனை சந்தியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி மண்மேடில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
28.03.2018 அன்று அன்று அதிகாலை இவ் விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள - பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி சாரதி லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றபோது கட்டுப்பாட்டுக்கு அப்பால் லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், எனினும் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.