வை.டபிள்யூ.எம்.ஏ நடாத்திய பெண்கள் தினம் நிகழ்ச்சி

அஸீம் கிலாப்தீன்-
ர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் இளம் பெண்கள் சங்கம் (வை.டபிள்யூ.எம்.ஏ) கொழும்பு தெமட்டகொடவை.எம்.எம்.ஏயில் இன்று 17ஆம் திகதி காலை 9.30மணிக்கு பெண்கள் தினம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது
வை.டபிள்யூ.எம்.ஏ தலைவி திருமதி பவாஸா தாஹா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பெண்கள் தொடர்பான பலவேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக ” பெண்களின் குரல்” இயக்கத்தின் தலைவியும் இலங்கை மாதர் சங்கம் இந்து மகளிர் மன்றம் ஆகியவற்றின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான திருமதி மிதிலா பத்மநாதன் கலந்துகொள்கின்றார். சிறப்பு அதிதியாக சட்டத்தரணி கிசாந்தி ஜெயசிங்கவும் கலந்துகொண்டனர் .
வை.டபிள்யூ.எம்.ஏ சங்கத்தின் அங்கம் வகிக்கும் பல்வேறு துறைகள்சார்ந்த பெண்களின் திறமைகளின் ஆற்றல்களும் இனம்காணப்பட்டு அவர்களுக்கு பரிசில்களும் விருதுகளும் இந்த நிகழ்வில் வழங்கப்படும். அத்துடன் அழகுக்கலை, சமையற்கலை ஆகியவை தொடர்பான செயன்முறைகளும் இது தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களால் செய்து காட்டப்படன.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -