தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் புதிய மேயராக ஸ்டாண்லி டயஸ்

அஷ்ரப் ஏ சமத்-தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் புதிய மேயராக ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சியின் உறுப்பிணா் 23 வாக்குகளைப் பெற்று ஸ்டாண்லி டயஸ் மேயராக தெரிபு செய்யப்பட்டாா். 
 இன்று (26) காலை 09.00 மணிக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளா் முன்னிலையில் மேயா், பிரதிமேயா் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றன. ஜ. தே.கட்சியின் சாா்பில் சுனேத்திரா ரணசிங்கவுக்கு ஆதரவாக 21 வாக்குகளும் ஸ்ரீ.ல.பொதுசன பெரமுன சாா்பில் ஸ்டான்லி டயஸூம் 23 வாக்குகளைப் பெற்றனா். பிரதி மேயராக பொதுசன ஜக்கிய முன்னணியின் சாா்பில் போட்டியிட்ட கீா்த்தி உடவத்த 25 வாக்குகளைப் பெற்று தெரிபு செய்யப்பட்டுள்ளாா். ஜ.தே.கட்சி சாா்பில் பிரதி மேயருக்கு போட்டியிட்ட உறுப்பிணா் 19 வாக்குகளைப் பெற்றாா்.

கடந்த உள்ளுராட்சித்தோ்தலின்போது தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மொத்த உறுப்பிணா் 48 ஆகும். அவற்றில் ஜ.தே.கட்சி 36,985 வாக்குள் பெற்று 19 ஆசனமும், ஸ்ரீலங்க பொதுசன பெருமுன 36,029 வாக்குகளைப் பெற்று 19 ஆசனம், பொதுசன ஜக்கிய முன்ணனி 04 ஜே.வி.பி 4 ஆசனங்களைப் பெற்றிருந்தனா்.
இன்று மேயா் வாக்கெடுப்பில் பொதுசன ஜக்கிய முன்னணியின் 6 உறுப்பிணா்களில் 4 பேர் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனா். அத்துடன் ஜே.வி.பியினா் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தனா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -