தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் மாதிரி கிராமத்தில் 11.3.2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென வீசிய சுழல் காற்றினால் சில குடியிருப்புகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. 11.3.2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட இந்த சுழல் காற்றினால் சில குடியிருப்புகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதோடு இப்பகுதியில் காணப்பட்ட சில மின்சார தூண்களும் காற்றினால் சாய்ந்து கீழே விழும் அபாய நிலை தோன்றியுள்ளது.
எனவே இது தொடர்பாக இப்பிரதேச மக்களால் தலவாக்கலை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கும் வீட்டு உபகரணங்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இருந்தும் சேமடைந்த சில குடியிருப்புகளின் கூரைகளை அயலவர்களின் உதவியோடு குடியிருப்பாளர்கள் சரிசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.