மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன் ; எ.எல்.எம். நஷீர் எம்.பி


அன்வர்.ஜே.நௌஷாத்-
ல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அதேவேளை இத்தேர்வில் அடைவு மட்டத்தை அடையத்தவறிய மாணவர்கள் மீண்டும் முயற்சித்து நல்ல பெறுபேறுகளைப் பெற வல்ல நாயனை பிரார்த்திக்கிறேன். என க.பொ.த. சா/த பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் கௌரவ எ.எல்.எம்.நசீர் பா.உ அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில், நமது சமூகம் பொறுப்புணர்ச்சியுடனும் நிதானமாகவும் செயற்பட வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் பயணிக்கின்றோம். இந்நிலையில் மாணவர்கள் நமது சமூகத்தின் மீதான உண்மையான அக்கறையை வெளிக்காட்டும் வழி தமது கற்றலை பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுத்துவதுதான்.

பல்வேறு குடும்ப நிலைமைகள், கஷ்ட்டங்கள், மனத்தாங்கல்கள் இவற்றுக்கெல்லாம் அப்பால் நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதனை நிறைவு செய்ய உங்கள் கற்கை மேலும் உயர்தரத்திலும் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. கற்றலுக்காக நாம் எல்லாவகையான உதவிகளையும் செயற்படுத்த தயாராக இருக்கின்றோம்.
விசேடமாக இம்மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாவதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலைகளின் அதிபர்கள், கற்பித்த ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நழ்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -