ஈபிடிபியின் ஆதரவுடன் யாழ் மநாகர சபையின் மேயரானார் த.தே.கூட்டமைப்பின் ஆர்னோல்ட்.

பாறுக் ஷிஹான்-
யாழ் மநாகர சபையின் மேயராக த.தே.கூட்டமைப்பின் ஆர்னோல்ட் ஈபிடிபியின் ஆதரவுடன் தெரிவாகியுள்ளார்.
முன்னதாக, இன்று (26)காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேயர் வேட்பாளர் தெரிவுக்கு ததேகூ ஆர்னோல்ட், ஈபிடிபி றெமிடியஸ், த.தே. மக்கள் முன்னிணியின் மணிவண்னண் ஆகியோர் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன் போது ஆர்னோல்ட் 18 வாக்குகளும், றெமிடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் தலா 13 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்த நிலையில் றெமிடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் குலுக்கள் முறை தெரிவில் றெமிடியஸ் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் பத்து நமிடங்கள் நேரம் கோரப்பட்டு மீண்டும் சபைக்கு வந்த றெமிடியஸ் தான் மேயர் வேட்பாளர் தெரிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ஈபிடியின் ஆதரவுடன் ஆர்னோல்ட் யாழ் மாநாகர சபையின்மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ஆர்னோல்ட் பெற்ற 18 வாக்குகளில் இரண்டு வாக்குகள் ஜ.தே.க யின் வாக்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -