காரைதீவு பிரதேசவைத்தியசாலைக்கு ஆய்வுகூட வசதியை ஏற்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நாளொன்றுக்கு 40 இரத்தமாதிரிகள் பிரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டிள்ளது. வார்ட் அனுமதிக்கான நோயாளிகளின் இரத்தமாதிரியே இவ்விதம் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.வெளிநோளர் பிரிவிற்கு வருவோருக்கு இரத்தபரிசோதனை செய்வதில்லை.
அங்கு சேரிக்கப்படும் இரத்தமாதிரிகள் அனைத்தும் கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பல மணித்தியாலங்களின்பின்னர் அதற்கான அறிக்கை கிடைக்கப்பெறுகின்றது.
அதன்பின்புதான் குறித்த நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது.
காரைதீவின் தரத்திலான ஏனைய வைத்தியசாலைகளில் இவ்வாய்வுகூடவசதி இருப்பதாகத் தெரிகிறது. ஆய்வுகூட அலுவலர் இருப்பதாகக்கூப்படுகிறது.
எனவே அப்பரிசோதனையை காரைதீவு வைத்தியசாலையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும்.அல்லது தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையை வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவும் நிருவாகமும் மேற்கொள்ளவேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கைவிடுக்கினறனர்.